இணக்க அரசியல் செய்தால்தான் சிங்கள மக்களின் இதயங்களை வென்று தமிழர் உரிமையை பெற்று கொள்ளமுடியம் ..
[vifblike]
510 Total views
ஐக்கிய தேசிய முன்னணி அரசின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 45 மேலதிக வாக்குகளினால் வெற்றிபெற்றுள்ளது
ஆதரவாக 119 வாக்குகளும், எதிராக 74 வாக்குகளும் கிடைத்த இந்த வாக்கெடுப்பில் .தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி அரசின் பங்காளிக் கட்சிகள் அனைத்தும் வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.
மஹிந்த அணியும், ஜே.வி.பியும் எதிராக வாக்களித்தன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் இறுதி நேரத்தில் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் சபையிலிருந்து வெளியேறி இருந்தார்கள்.
2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் கடந்த மார்ச் 5ஆம் திகதி நிதி அமைச்சர் மங்கள சமரவீரவால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.