தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கம் 0750973758 | மின்னஞ்சல் battimedialk@gmail.com

கொரோனாவினால் மரணமடைந்தவர்களை அவரவர் மத முறைப்படி நல்லடக்கம் செய்ய அரசாங்கம் அனுமதிக்குமாறு கோரிக்கை.

[vifblike]

 71 Total views

கொரோனாவினால் மரணமடைந்தவர்களை அவரவர் மத முறைப்படி நல்லடக்கம் செய்ய அரசாங்கம் அனுமதிக்குமாறு கோரி கல்முனை மாநகர சபையில் கல்முனை மாநகர சபை சுயேட்சை உறுப்பினர் ஏ.ஆர்.எம்.அஸீமினால் முன்வைத்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றபட்டுள்ளது.

கல்முனை மாநகர சபையின் மாதாந்த பொதுச் சபை அமர்வு மாநகர சபையின் பழைய சபா மண்டபத்தில் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது சபையின் இறுதி கட்ட நிகழ்வில் திடீரென எழுந்த கல்முனை மாநகர சபை சுயேட்சை உறுப்பினர் ஏ.ஆர். எம். அஸீம், ‘கடந்த காலங்களில் இலங்கையில் கொரோனா வைரஸ் அனர்த்தங்களினால் மரணமடைந்தவர்களின் சடலங்கள் அவரவர் மத உரிமையை மீறி நல்லடக்கம் செய்யப்படாமல் எரிப்பதை இட்டு மனவேதனை அடைகிறோம். அதுபோலவே ஏனைய சக உறுப்பினர்களும் கவலைப்படுகின்றனர்.

கொவிட் 19 தொற்றால் மரணமடைந்தவர்களை அவரவர் மதப்படி அடக்கம் செய்ய அரசாங்கத்திடம் வேண்டிய விஷேட பிரரேணையை சபையில் கௌரவ உறுப்பினர்களின் சம்மதத்துடன் நிறைவேற்றுமாறு தற்போது முன் வைக்கின்றேன். எனவே இன, மத, கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் சக உறுப்பினர்கள் ஆதரவு வழங்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்தார்.

மேலும் கடந்த காலங்களில் கொரோனா வைரஸ் காரணமாக மரணமடைந்தவர்களை நல்லடக்கம் செய்யப்படாது எரிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக மக்களுக்காக சில தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முன் வந்திருந்ததுடன் சில பிரதேச சபையிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: