தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கம் 0750973758 | மின்னஞ்சல் battimedialk@gmail.com

கொரோனா அறிகுறிகளுடன் பெண் ஒருவர் இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

[vifblike]

 326 Total views

சந்தேகத்திற்கிடமான அறிகுறிகளுடன் பெண் ஒருவர் இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

45 வயதான அலவ்வ பகுதியை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் ஹோமாகம பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் நேற்று இரவு தங்கியிருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அலவ்வயிலிருந்து கொட்டாவ வந்திருந்த அவர், முச்சக்கர வண்டியில் விடுதிக்கு சென்றுள்ளார்.

நேற்றிரவு குறித்த பெண்ணுக்கு காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் இருந்தமையால் அந்த பெண் ஆம்புலன்ஸ் ஒன்றை வரவழைத்துள்ளதாக ஹோமகாமா சுகாதார அலுவலர் தெரிவித்தார்.

இந்நிலையில், குறித்த பெண் இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: