தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கம் 0750973758 | மின்னஞ்சல் battimedialk@gmail.com

கொரோனா தொற்றிலிருந்து உத்தியோகத்தர்களை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கொன்று மண்முனைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

[vifblike]

 81 Total views

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் அனுசரனையுடன் புதுக்குடியிருப்பு சித்த ஆயுள்வேத ஆதார வைத்தியசாலையின் ஏற்பாட்டில் கொரோனாவில் இருந்து பொது மக்களையும், உத்தியோகத்தர்களையும் தற்காத்துக் கொள்வது தொடர்பான விழிப்புணர்வு செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதனொரு அங்கமாக கொரோனா தொற்றிலிருந்து உத்தியோகத்தர்களை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கொன்று மண்முனைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

புதுக்குடியிருப்பு சித்த ஆயுள்வேத ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் செல்வி ஜெ.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ந.சத்தியானந்தியின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகியது.

இதன்போது கொரோனா தொற்றில் இருந்து தன்னை தானே எவ்வாறு தற்காத்துக் கொள்வது, கொரோனா தொற்றுக்குள்ளான உத்தியோகத்தர் ஒருவர் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் வைத்தியர்களினால் தொழிவூட்டப்பட்டதுடன், உத்தியோகத்தர்களுக்கு துண்டுப் பிரசுரங்களும், உடற்தேற்றி குடிநீர் தயாரிப்பதற்கான மூலிகை கலவையும் இலவசமாக வழங்கிவைக்கப்பட்டமையம் குறிப்பிடத்தக்கது.

இதன் போது உத்தியோகத்தர்களுக்கான உடற்தேற்றி குடிநீர் தயாரிக்கும் மூலிகை கலவை அடங்கிய பொதிகள் வைத்திய அத்தியட்சகரினால் பிரதேச செயலாளரிடம் வழங்கி வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: