யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இன்றையதினம் 71 பேருக்கு கொவிட்19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
69 Total views

யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இன்றையதினம் 71 பேருக்கு கொவிட்19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் முடிவுகளில் கிளிநொச்சியில் ஐவருக்கும் கடற்படை தனிமைப்படுத்தல் முகாமை சேர்ந்த ஏழு பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர்த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இன்றைய பரிசோதனையில் கிளிநொச்சி தொண்டமான்நகரில் தண்ணீர் வியாபாரத்தில் ஈடுபடும் ஒரே விற்பனை நிலையத்தை சேர்ந்த மூவருக்கும் குறித்த விற்பனை நிலையத்தின் அருகில் இருக்கின்ற மற்றுமொரு விற்பனை நிலையத்தில் தொழில் புரியும் ஊழியர் ஒருவருக்கும் மேலும் அருகிலுள்ள விற்பனை நிலையத்தில் கடமை புரிந்து கடந்த இரு நாட்களுக்கு முன்னர் தொற்று உறுதி செய்யப்பட்டவரின் உறவினருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் யாழ்ப்பாணம் கடற்படை தனிமைப்படுத்தல் முகாமில் இருக்கும் 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை இன்றையதினம் யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை. நாளை பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.