தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கம் 0750973758 | மின்னஞ்சல் battimedialk@gmail.com

வட்டவளை, குயில்வத்தை பகுதியைச் சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவன் ஒருவனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

[vifblike]

 54 Total views

வட்டவளை, குயில்வத்தை பகுதியைச் சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவன் ஒருவனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய் கிழமை பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் பரிசோதனை முடிவுகள் வெளிவருவதற்கு முன்னர் குறித்த மாணவர் நேற்று பாடசாலைக்குச் சென்ற நிலையில் , பாடசாலை நிர்வாகத்தினரால் அவர் திருப்பி அனுப்பட்டுள்ளார்.

அத்துடன் குறித்த மாணவன் கொழும்பு ஒருகொடவத்தையில் தனது தந்தை மற்றும் தாய் வசிக்கும் இருப்பிடத்துக்கு பாட்டி சகிதம் அண்மையில் சென்றுள்ளார்.

மீண்டும் ஊர் திரும்பும் வழியில் அவரிடம் எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.

அத்தோடு பி.சி.ஆர் பரிசோதனையின் அடிப்படையில் குறித்த மாணவன் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து இன்று குறித்த பாடசாலை வளாகம் தொற்றுநீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: