தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கம் 0750973758 | மின்னஞ்சல் battimedialk@gmail.com
நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவை தொடர்ந்து இராணுவத்தினர் மற்றும் பொலிசார் முள்ளியவளையில் நிலை கொண்டுள்ளனர்.
[vifblike]
56 Total views
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தின் பெரும் பகுதி இராணுவத்தினரின் பிடியில் இருந்துவரும் நிலையில் மீதமாக உள்ள ஒரு பகுதியை துப்பரவு செய்து கடந்த வருடங்களில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் இடம் பெற்றன
இம்முறை நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவை தொடர்ந்து குறித்த இடத்தில் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் மற்றும் பொலிசார் நீதிமன்ற கட்டளையை மீறி நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறவிடாது தடுக்கும் முகமாக குறித்த பகுதியில் நிலை கொண்டுள்ளனர்