தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கம் 0750973758 | மின்னஞ்சல் battimedialk@gmail.com

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 2ஆம் இடத்தை பிடித்த புதியவர்.

[vifblike]

 14 Total views

அவரது டெஸ்லா கார் நிறுவனத்தின் பங்குகள் விலை ஏறியதை தொடர்ந்து அவரது சொத்து மதிப்பு 7.2 பில்லியன் டாலர்களில் இருந்து 128 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. ப்ளூம்பெர்க் பில்லினியர்கள் பட்டியல் தரும் தகவல்களின்படி. உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் தற்போது முதலிடத்தில் இருக்கிறார். உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 5வது இடத்தில் இருந்த எலான் மஸ்க், மைக்ரோசாப்ட் குழுமத்தின் முன்னாள் தலைவர் பில் கேட்சை 3வது இடத்திற்குத் தள்ளி 2வது இடத்தைப் பிடித்தார்.

கடந்த வாரம் எலான் மக்ஸ்-ன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அமெரிக்காவில் முதல் முறையாக ஒரு தனியார் நிறுவனம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பியதன் வாயிலாகவும், டெஸ்லா நிறுவனத்தை முதல் முறையாக S&P 500 குறியீட்டின் கீழ் சேர்க்கப்பட்டதன் காரணமாக டெஸ்லா பங்குகள் பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்தது.

இதன் எதிரொலி இந்த வாரமும் துவங்கும் காரணத்தால் எலான் மஸ்க்-ன் சொத்து மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2020ஆம் ஆண்டில் மட்டும் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு சுமார் 100.3 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இது உலகப் பணக்காரர்கள் பட்டியலில் யாரும் இவ்வளவு பெரிய வளர்ச்சியை இந்தக் குறுகிய காலத்தில் அடைந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்சில் கடந்த ஜனவரி மாதம் 500 பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் பெற்ற இடம் 35. ஆனால் கடந்த 10 மாத காலத்தில் எலான் மஸ்க் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: