தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கம் 0750973758 | மின்னஞ்சல் battimedialk@gmail.com

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் தேசிய அடையாள அட்டை விண்ணப்பப்படிவங்கள் ஒப்படைக்கப்படும் இறுதித் திகதி எதிர்வரும் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது.

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் தேசிய அடையாள அட்டை விண்ணப்பப்படிவங்கள் ஒப்படைக்கப்படும் இறுதித் திகதி எதிர்வரும் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடையும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

தேசிய அடையாள அட்டைகளுக்கான விண்ணப்ப படிவங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை கடந்த 24ம் திகதியுடன் நிறைவடைய இருந்தாலும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் நன்மை கருதி, இந்த காலஎல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான பாடசாலை பரீட்சார்த்திகளின் விண்ணப்பப்படிவங்கள் ஏற்கனவே கிடைக்கப் பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த பரீட்சைக்கு தோற்றும் அரச ஊழியர்களின் விண்ணப்படிவங்களை அத்தாட்சிப்படுத்தும் அதிகாரம் உரிய பிரதேச கிராம சேவர்களுக்கு மேலதிகமாக நிறுவன தலைமை அதிகாரிக்கும் வழங்கப்பட்டுள்ளது என்று ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: