ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக பேஸ்புக்கில் விமர்சித்த ஒருவர் கைது .
[vifblike] 
76 Total views

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக பேஸ்புக்கில் விமர்சித்து பதிவிட்ட முஸ்லிம் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கொழும்பு – தெஹிவளையில் வைத்து இன்று கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
தெஹிவளை – பீற்றர் வீதியைச் சேர்ந்த நபர் ஒருவரே கைது செய்யப்பட்டிருக்கின்றார் என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் இன்று கொழும்பு பிரதான நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது அவரை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.