தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கம் 0750973758 | மின்னஞ்சல் battimedialk@gmail.com

மின்சார உதிரிப்பாகங்கள் என்று அறிவித்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 12 மோட்டார் வாகனங்கள் சுங்கத் திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

[vifblike]

 57 Total views

மின்சார உதிரிப்பாகங்கள் என்று அறிவித்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 12 மோட்டார் வாகனங்கள் சுங்கத் திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன் பெறுமதி ஐந்து கோடியே ஐம்பது லட்சம் ரூபா (550,00,000) என மதிப்பிடப்பட்டுள்ளது.

12,140 கிலோ கிராம் எடை கொண்ட 40 அடி நீளமுடைய 03 கொள்கலன்கள் சிங்கப்பூாிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளதாக தொியவந்துள்ளது. 

இதனுள் இருந்து டொயோட்டா ஹைஏஸ் சிற்றுார்திகள் 02, டொயோட்டா விட்ஸ் மோட்டார் வண்டிகள் 03, நிஸான் சிறிய ரக சிற்றுார்தி 01, ஹை ஜெட் சிறியரக சிற்றுார்திகள் 03 மற்றும் ஹட்ஸ்லர் வெகன் 03 ஆகியன சுங்கத் திணைக்கள அதிகாாிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது குறித்து சுங்கத் திணைக்களத்தினால் மேலதிக விசாரணகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு இச்சம்பவம் தொடர்பில் கொழும்புத் துறைமுகத்தில் பணியாற்றுகின்ற இலிகிதர் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 2ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் இலங்கை சுங்கத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: