தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கம் 0750973758 | மின்னஞ்சல் battimedialk@gmail.com

சுவாமி விவேகானந்த அடிகளாரின் சிகாகோ சொற்பொழிவின் 125 ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு சிறப்பு சொற்பொழிவாற்ற தென்னிந்திய நடிகர் பத்மஸ்ரீ விவேக் அவர்கள் மட்டக்களப்புக்கு வருகை.

[vifblike]

 630 Total views

சுவாமி விவேகானந்த அடிகளாரின் சிகாகோ சொற்பொழிவின் 125 ம் ஆண்டு நிகழ்வுகள் ,மட்டக்களப்பு கல்லடி இராம கிருஷ்ண மிஷன் அமைப்பினரால் 11ம் திகதி அன்று சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் நடாத்தப்பட்டது. இந்த நிகழ்வில் தென்னிந்திய நடிகர் பத்மஸ்ரீ விவேக் அவர்கள் விசேஷ அதிதியாக கலந்து கொண்டு சிறப்பு சொற்பொழிவாற்றினார்.
கடைசி தமிழன் இருக்கும் வரை தமிழ் அழியாது என்று உரையாற்றியபோது பலத்த கரகோஷம் வானை பிளந்தது.
இராம கிருஷ்ணமிஷன் சர்வதேச ரீதியில் இன மத பாகுபாடின்றி சமூக சேவை செய்து வரும் ஒரு அமைப்பாகும். அமெரிக்க சிகாகோ நகரில் மதங்களுக்கான உலக நாடாளுமன்றத்தில் விவேகானந்த அடிகள் கீழைத்தேச கலை கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை பற்றிய எழுச்சி மிக்க சொற்பொழிவின் 125 ஆண்டை நினைவு கூறும் வகையில் இராம கிருஷ்ணமிஷன் அமைப்பானது சர்வதேசமெங்கும் கொண்டாடி வருகிறது .அதில் ஒரு அங்கமாக மட்டக்களப்பிலும் நிகழ்வுகள் நடை பெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மிஷன் தலைவர் திரு தஸஜானந்தர் அவர்களின் தலைமையில் 11 ம் திகதி திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வில் அரச அதிபர் திரு உதயகுமார் அவர்களும் மற்றும் மாநகசபை முதல்வர் திரு சரவண பவன் ,பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ நேஷன் அவர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் சிவானந்த மைதானத்தில் திரண்டிருந்து நடிகர் பத்மஸ்ரீ விவேக் அவர்களின் சிறப்பு சொற்பொழிவை கேட்டு மகிழ்ந்தனர்.

சிவேந்திரன் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: