தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கம் 0750973758 | மின்னஞ்சல் battimedialk@gmail.com

277 total views, 5 views today

11.10.2015 தொடக்கம் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் விளக்கமறியல் உள்ளார்.

Share Now
  •  
  •  
  •  
  •  

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட ஐவரின் விளக்கமறியல் எதிர்வரும் அக்டோபர் 28ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம்.இர்ஸதீன் முன்னிலையில் இன்று இடம் பெற்றது.

இதன் போது எதிர்வரும் ஒக்டோபர் 28ம் திகதி வரை சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் உள்ளிட்ட ஐவரும் இன்றைய வழக்கு விசாரணையின் போது மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கடந்த 2005ம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில் நடைபெற்ற நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்து கொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட 05 பேர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபரான முன்னாள் முதலமைச்சர சிவநேசதுரை சந்திரகாந்தன் கடந்த 11.10.2015 அன்று கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

278 total views, 6 views today


Share Now
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *