தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கம் 0750973758 | மின்னஞ்சல் battimedialk@gmail.com

157 total views, 2 views today

கொடுவாமடு, வேப்பவெட்டுவான் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் நடவடிக்கைகள் சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.

Share Now
  •  
  •  
  •  
  •  

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் வறட்சி காரணமாக அனேகமான பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகின்றது. மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, சில அமைப்புகள் குடிநீர் விநியோகிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றன.

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மிகவும் பின்தங்கிய பகுதிகளான கொடுவாமடு, வேப்பவெட்டுவான் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் நடவடிக்கைகள் சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.

இந்த கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாட்டினால் மக்கள் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கிவருவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் சுவிஸ் உதயம் அமைப்பின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் இந்த குடிநீர் விநியோகம் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வில் சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளர் கே.துரைநாயகம், மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரும் மகளிர் மாவட்ட சம்மேளன தலைவியுமான செல்வி மனோகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தாங்கள் தினமும் குடிநீரைப்பெற்றுக்கொள்வதற்கு நீண்டதூரம் பயணம் செய்து ஆறுகளில் குடிநீரைப் பெற்றுக்கொள்வதாகவும், சுவிஸ் உதயம் மேற்கொண்ட உதவி காரணமாக குடிநீர் பிரச்சினையை ஓரளவு குறைக்கமுடியும் எனவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

158 total views, 3 views today


Share Now
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *