தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கம் 0750973758 | மின்னஞ்சல் battimedialk@gmail.com

முஸ்லிம் பள்ளிவாயல்களிலிருந்து பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட இறைச்சி வெட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் கத்தி வகைகளை மீண்டும் அப்பள்ளிவாயல்களுக்கு ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Share Now
  •  
  •  
  •  
  •  

கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலின் பின்னர் முஸ்லிம் பள்ளிவாயல்களிலிருந்து பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட இறைச்சி வெட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் கத்தி வகைகளை மீண்டும் அப்பள்ளிவாயல்களுக்கு ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பள்ளிவாயல்களினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் பேரில் உடுநுவர, வெலம்பொட பொலிஸார் இதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

ஹஜ் பெருநாளையடுத்து நிறைவேற்றப்படும் உழ்ஹிய்யா கடமைக்கு பயன்படுத்த இந்த கத்திகள் தேவை என விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று, குறித்த பொலிஸ் நிலையத்தின் பதில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இவற்றை மீண்டும் வழங்க அனுமதியை வழங்கியுள்ளார்.

இதன்படி, 76 கத்திகளும், 13 கோடாரிகளும் இவ்வாறு திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, அரச பாதுகாப்பு அமைச்சின் பரிந்துரைகள் இன்றி இவ்வாறு ஆயுதங்களை ஒப்படைத்தமை தொடர்பில் வெளியாகியுள்ள செய்திகள் குறித்து நாட்டிலுள்ள தீவிரவாத அமைப்புக்கள் பெலம்பொட பொலிஸாரிடம் வினவியுள்ளனர். இதற்கு இவ்வாறான எதுவும் நடைபெறவில்லையென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இருப்பினும், பொலிஸ் தகவல் புத்தகங்களில் இவ்வாறு ஆயுதங்கள் ஒப்படைத்த தகவல்கள் இருப்பதாக அந்த தீவிரவாத அமைப்புக்கள் தெரிவித்துள்ளதாக சகோதர ஊடகமொன்று அறிவித்துள்ளது.

வெலம்பொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் பொலிஸ் பரிசோதகருமான சாந்த பண்டார கண்டி தலதா பெரஹரா நிகழ்வுக்காக கடமையாற்ற சென்றிருந்த போது, பதில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக இருந்தவர் இந்த ஆயுதங்களை வழங்கியுள்ளதாகவம் அச்செய்தியில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.


Share Now
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *