மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் 100 அடி நீளமான செப்பு பட்டம் எங்கே?
Share Now
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட புதிய இடிதாங்கியில் அமைக்கப்பட்டிருந்த செப்பு பட்டம் திருடப்பட்டுள்ளது.
சுமார் 100 அடி நீளமான செப்பு பட்டமே திருடப்பட்டுள்ளது. இது தொடர்பில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நிர்வாகத்தால், கடந்த 5ம் திகதி மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
போதனா வைத்தியசாலையில் புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தில் பல இலட்சம் ரூபா செலவில் இடிதாங்கி அமைக்கப்பட்டது. அந்த இடிதாங்கியிலிருந்து, நிலம் வரை பொருத்தப்பட்டிருந்த, சுமார் 100 அடி நீளமாக செப்பு பட்டமே திருடப்பட்டுள்ளது.
சுமார் 10 நாட்களின் முன்னர் திருடப்பட்டிருக்கலாமென வைத்தியசாலை நிர்வாகம் கருதுகிறது.
Share Now