தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கம் 0750973758 | மின்னஞ்சல் battimedialk@gmail.com

303 total views, 2 views today

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார்?

Share Now
  •  
  •  
  •  
  •  

304 total views, 3 views today

ஐனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறக் கூடிய வேட்பாளர் சஜித் பிரேமதாசா என்று தான் உண்மையில் நாங்கள் நினைக்கின்றோம். அவ்வாறு வெற்றி பெறக் கூடிய வேட்பாளர் ஒருவரையே நாங்கள் விரைவில் பெயரிடுவோம் என அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஐயம் செய்த அமைச்சர் மங்கள சமரவீர வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த பொது ஐனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஊடகவியியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,

அடுத்த ஐனாதிபதித் தேர்தலில் நாங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவோம். வெற்றி பெறக் கூடிய வேட்பாளர் ஒருவரை நாங்கள் விரைவில் பெயரிடுவோம். ஆனால் உண்மையில் எங்களுக்கு பல தரப்பட்ட கருத்துக்கள், எண்ணங்கள் இருக்கலாம். ஆனால் அவ்வாறு பெற்றி பெறக் கூடிய வேட்பாளர் சஜித் பிரேமதாசா தான் என்று நாங்கள் உண்மையில் நினைக்கின்றோம்.

ஆயினும் அப்படியாக ஒரு தீர்மானத்தை இதுவரையில் எடுக்கவில்லை. ஏனெனில் அந்தத் தீர்மானத்தை எடுக்க வேண்டியது நாடாளுமன்றக் குழுவும் செயற்குழுவுமே தான். அதனடிப்படையில் நாடாளுமன்றக் குழுவும் மற்றும் செயற்குழுவும் கூடி அங்கு பெரும்பான்மையானவர்கள் என்னத்தைச் சொல்கின்றனரோ அதனைத் தான் கட்சி செய்யும் என மங்கள சமரவீர மேலும் தெரிவித்தார்.


Share Now
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *