தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கம் 0750973758 | மின்னஞ்சல் battimedialk@gmail.com

நொச்சிமுனை அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் -2019

Share Now
  •  
  •  
  •  
  •  

வரலாற்று புகழ்மிக்க கல்லடி – உப்போடை, நொச்சிமுனை அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தில் இன்று (10.08.2019) சனிக்கிழமை 5ஆம் குறிச்சிப் பொதுமக்களினால் சடங்கு நிகழ்வுகள் நடத்தப்பட்டது. கடந்த 04.08.2019 ஞாயிற்றுக் கிழமை ஆரம்பமாகி நடைபெற்று வரும் உற்சவ நிகழ்வுகளில்; நாளை 11.08.2019 ஞாயிற்றுக்கிழமை மடிப்பிச்சை எடுத்தல், நெல் குற்றல் ஆகிய சடங்கு வைபவங்கள் சிறப்பாக இடம்பெற உள்ளன.


நெல்குற்றல் நிகழ்வானது அம்பாளின் அருள் வேண்டி பிரார்த்தித்து நேர்த்தி வைத்த அடியவர்கள் நாளை காலை மடிப்பிச்;சை எடுத்து வீதிவழியே கால்நடையாக ஆலயத்தினை வந்தடைந்தடைகின்றனர். அதனைத் தொடர்ந்து ஆலய முன்றலில் பாரம்பரியமாக கடைப்;பிடிக்கப்பட்டுவரும் நெல்குற்றல் நிகழ்வு இடம்பெறுகின்றது.
இந் நிகழ்வுகளைத் தொடர்ந்து நாளை மறுதினம் 12.08.2019 திங்கட்கிழமை திருக்கும்பம் சொரிதல் இடம்பெற்று சடங்கு வைபவம் இனிது நிறைவடையவுள்ளது.


Share Now
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *