தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கம் 0750973758 | மின்னஞ்சல் battimedialk@gmail.com

237 total views, 5 views today

ஏறாவூர் ஸ்ரீ பத்ர காளி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்குப் பெருவிழா-2019

Share Now
  •  
  •  
  •  
  •  

ஏறாவூர் ஸ்ரீ பத்ர காளி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்குப்  பெருவிழா 2019.08.03 சனிக்கிழமை அம்பாளை எழுந்தருளச்செய்தலுடன் இனிதே ஆரம்பமாகியது. 2019.08.04 ஞாயிற்றுக்கிழமை அம்பாளின் கருவறைத் திருக்கதவு திறந்து விசேட அபிஷேக ஆராதனைகளும், பிற்பகல் திருச்சடங்கு வழிபாடுகளும் இடம் பெற்றன.

2019.08.07 புதன்கிழமை அம்பாளுக்கு பிடித்தமான கற்பூர ஆரத்தி நிகழ்வு இடம் பெற்றது.இந் நிகழ்வானது தொடர்ந்து 07 நாட்கள் இடம் பெற்றன.
2019.08.08அன்று வியாழக்கிமை பாரம்பரிய பெண்கள் சடங்கு  ஊர்க்காவல் நிகழ்வும்  வீரகம்பம் வெட்டுதல்  நிகழ்வும் இடம் பெற்றது. அடுத்தநாள் 
2019.08.09 வெள்ளிக்கிமை வீர பத்திரர் சுவாமி ஆலயத்தில் இருந்து மங்கையர்களின் பாற்கலச பவனியும் சிறப்பாக இடம் நடைபெற்றதுடன் 
2019.08.10 சனிக்கிழமை நோர்ப்பு நெல் நேர்தல், நெல் குற்றுதல் விநாயக பானை எழுந்தருளப்பண்ணுதல் ஆகியனவும், நள்ளிரவு புனித அக்கினி வளர்த்தல் என்பனவும் பக்தி பூர்வமாக நடை பெற்றன .

அம்பாளின் பூஜை நிகழ்வுகளில் முக்கிய நிகழ்வான  தீ மிதிப்பு வைபவம் 2019.08.11ஞாயிற்று கிழமை காலை வேளையில் இனிதே நடந்தேறியது. 
திருச்சடங்கு கிரிகைகள் யாவும் பிரதம பூசகர் விஸ்வப்பிரம்ம  ஸ்ரீ. கு.வாமதேவன் ஐயா   மற்றும் உதவிப் பூசகர்களாலும் நடாத்தப்பட்டது.
மகா சக்தி யாகம் சிவ ஸ்ரீ  கருணாகர மஹேஸ்வரக்குருக்கள் அவர்களால் நடாத்தப்பட்டது. 

திருச்சடங்கு காலங்களில் திரு .நாகமணி குடும்பத்தினர், திரு சு. பஞ்சாட்சரம் குடும்பத்தினர், திரு.வே.பரமேஸ்வரன்  குடும்பத்தினர், திருமதி குபேரன் லதா குடும்பத்தினர், திரு நவராஜா, திரு யோ. திரவியநாத் குடும்பத்தினர், திரு ஆறுமுகம் குடும்பத்தினர் ஆகியோரால்   பக்த அடியார்கள் அனைவருக்கும் அன்னதான விருந்துபசாரம் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்

238 total views, 6 views today


Share Now
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *