தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கம் 0750973758 | மின்னஞ்சல் battimedialk@gmail.com

உயிரை பணயம் வைத்தேனும் சஜித்தை ஜனாதிபதியாக்குவோம்.

Share Now
  •  
  •  
  •  
  •  

சஜித் பிரேமதாசா உண்மையான பௌத்த, சிங்கள தலைவர். எமது கட்சியின் ஆட்சியின் குறைபாடுகள் இருந்தாலும், உண்மையான தலைவராக சஜித் அடையாளம் காணப்பட்டுள்ளார். குடும்ப ஆட்சியினை ஏற்படுத்த வேண்டிய தேவை ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடையாது. ஐக்கிய தேசிய கட்சி மக்களாணையினை மதிக்கும் வேட்பாளரையே தொடர்ந்து களமிறக்கியுள்ளது. இந்த ஜனநாயக பொது கொள்கையே இனியும் தொடரும். அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதியாக்க முழு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் சந்திப்பு தற்போது பதுளை நகரில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கஉரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

நாட்டு மக்களுக்கும், கட்சிக்கும் சேவையாற்றிய அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதியாக்குவதே எமது பிரதான நோக்கமாக காணப்படுகின்றது. 30 ஆண்டுகளாக மக்களின் உணர்வுகளை புரிந்த தலைவர் அவர்.

அவரை வெற்றிப்பெறசெய்ய எந்நிலைக்கும் செல்ல தயார். உயிரை பணயம் வைத்தேனும் அவரை ஜனாதிபதியாக்குவோம். நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் ஜனநாயக மிக்க அரசாங்கம் நிச்சயம் ஐக்கிய தேசிய கட்சியினால் உருவாக்கப்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது என்றும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான ஐதேக ஆதரவாளர்கள் திரண்டனர். ரஞ்சித் மத்தும பண்டார, சுஜீவ சேனநாயக்க, எரான் விக்கிரமரட்ண உள்ளிட்ட பல ஐ.தே.க பிரமுகர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.


Share Now
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *