தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கம் 0750973758 | மின்னஞ்சல் battimedialk@gmail.com

கிளிநொச்சியை சேர்ந்த பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டாளர் தீபன் என்பவர் விபத்தில் மரணம் .

கிளிநொச்சி முறிகண்டி பகுதியில் இன்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானார்.

பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் காரை செலுத்தி சென்றவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் கிளிநொச்சியை சேர்ந்த தீபன் என்பவராவார். இவர் கடந்த மாகாணசபை தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி சார்பில் போட்டியிட்டிருந்தார். தற்போது, பொதுஜன பெரமுனவின் கிளிநொச்சி செயற்பாட்டாளராக இருக்கிறார்.

அவரது காரிலும் மஹிந்த ராஜபக்சவின் படம் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: