தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கம் 0750973758 | மின்னஞ்சல் battimedialk@gmail.com

மட்டு. ஆயித்தியமலை புனித சதா சகாய மாதாவின் திருவிழா.

(சதீஸ்)
மட்டக்களப்பு ஆயித்தியமலை புனித சதா சகாய மாதாவின்  வருடாந்த திருவிழாவின் 4ம் நாள் விழா செவ்வாய்கிழமை மிக சிறப்புடன் நடைபெற்றது.

 ஆயித்தியமலை புனித சதா சகாய அன்னையின்  65ஆவது வருடா திருவிழா கடந்த  ​30ம் திகதி வெள்ளிக்கிழமை ​கொடி​யேற்றத்துடன் ஆரம்பமானது.

 செவ்வாய்கிழமை ​ மாலை பூசைகள் ஆரம்பமானது. இதனை நாவற்குடா, செங்கலடி பகுதி இறைமக்களும் அரச ஊழியர்களும் நடாத்தினர். 

திருவிழாவில் அருட்தந்தையர்கள்  ஜி.மகிமைதாஸ், மெருசன் கென்றிக் போன்றோரால் பூசைகள் நடாத்தப்பட்டு இன்றைய திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

எதிர்வரும் 7ம் திகதி கா​லை 5மணிக்கு பாதயாத்திரை  மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்திலிருந்து  வவுணதீவு ஊடாகவும், செங்கலடி புனித நிக்கலஸ் ஆலயத்திலிருந்து   கரடியனாறு ஊடாகவும் பாதயாத்திரை இடம்​பெறும் எனவும் ஆலய பங்குத்தந்தை அன்ரனி டிலிமா அவர்களால் ​தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்னையின் திருவிழா எதிர்வரும் 8ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.15 மணிக்கு கூட்டுத் திருப்பலியுடன் நிறைவு பெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: