தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கம் 0750973758 | மின்னஞ்சல் battimedialk@gmail.com

இலங்கையில் தமிழர்கள் பாதிக்க படுகின்ற போது தமிழர்களின் உரிமை மறுக்க படுகின்ற போது எனது குரல் ஒலித்து கொண்டதான் இருக்கும் -நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன்.

[vifblike]

 740 Total views

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் நீதிமன்ற உத்தரவையும் மதிக்காமல் பெளத்த மதகுருவின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டமையானது ஒட்டுமொத்த தமிழர்கள் மத்தியில் கசப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. ஆலய வளாகத்திற்குள் பெளத்த மதகுருவின் பூதவுடலினை கொண்டு சென்றமையானது இலங்கையில் வாழ்கின்ற இந்துக்களின் மத்தியில் பெரும் அசெளகரியத்தை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன்.

ஆலயத்தில் தமிழர்களின் உரிமை மறுக்கப்பட்டுவிட்டது, எங்கே வியாழேந்திரன் போகவில்லையா என்ற கேள்வி சமூக வலைத்தளங்களில் உலாவருவது வேடிக்கையாகவுள்ளது. கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் காணிகளையும், தமிழர்களின் வழிபாட்டு தலங்களையும் அபகரித்ததும், அடித்து நொறுக்கியவர்களுமே இந்த பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழர்களின் வழிபாட்டு தளங்களையும் கேவலப்படுத்தும் வேலைகளை ஒரு சில தேரர்கள் அரங்கேற்றியமையானது ஒட்டுமொத்த தமிழர்களுக்கு எதிரான வன்மைமுறையாகவும், தமிழர்களை அடக்கியாளும் செயற்பாடாகவுமே என்னால் பார்க்க படுகின்றது.

என்னை பொறுத்தவரையில் இலங்கையில் தமிழர்கள் பாதிக்க படுகின்ற போது தமிழர்களின் உரிமை மறுக்க படுகின்ற போது அது இலங்கையின் வடக்கு மாகாணமாக இருந்தாலும், கிழக்கு மாகாணமாக இருந்தாலும், மலையகமாக இருந்தாலும் எனது இனம் பாதிக்கபடும் போது எமது உறவுகளுக்காக எப்போதும் எனது குரல் ஒலித்து கொண்டதான் இருக்கும் என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

கடந்த காலங்களில் தமிழர்களின் சாத்வீகமான, நீதியான, நியாயமான போராட்டங்களை எனது மாவட்டத்தில் நான் பல முறை முன்னெடுத்து சென்ற போது எனது அழைப்புக்கள் எதுவும் இல்லாமல் பல பெளத்த தேரர்கள் கலந்து கொண்டார்கள். அவர்கள் எங்கள் இனம் சார்ந்த போராட்டங்களில் கலந்து கொண்ட போது ஒரு சில அரசியல்வாதிகளுக்கு சொந்தமான போலி முகநூல்களில் நான் சிங்களத்திற்கு அடிமையாகிவிட்டதாகவும், சிங்களத்திற்கு சோரம் போய்விட்டதாகவும் புனைக்கதைகளை கூறி மக்கள் மத்தியில் திரிவு படுத்தினார்கள்.

என்னை பொறுத்தவரை நான் எனது மக்கள் சார்ந்த போராட்டங்களில், எனது மக்களின் நீதி வேண்டி என்னால் அவர்கள் அழைக்கபடவில்லை என்றாலும், அவர்கள் கலந்து கொண்டால் நான் வரவேற்க தயார். அதேநேரம் ஏதோ ஒரு வழியில் இது போன்றவர்களின் அடக்குமுறையோ அல்லது அதிகார பிரயோகமோ இருக்குமாயின் நான் அதை பார்த்து வேடிக்கை பார்த்தவனும் அல்ல. அவர்களை எதிர்ப்பதில் நான் பின்நிற்க போவதும் இல்லை என்பதை இந்த இடத்தில் கூறிக்கொள்கின்றேன். அத்தோடு இனியும் வேடிக்கை பார்க்கும் அரசியல், நல்லிணக்கம் என்ற போர்வையில் தமிழர்களை வாழ்வியல் ரீதியாக பின்தள்ளப்படும் அரசியல் தமிழர்கள் மத்தியில் மாற்ற பட வேண்டும்.

இன்று கிழக்கு மாகாணத்தில் இருந்து கொண்டு மாற்றினத்தினை சேர்ந்த ஒருசில அரசியல்வாதிகளும், அவர்களின் அடிவருடிகளும் இந்த நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் தமிழர்களின் உரிமை மறுக்க பட்டுவிட்டது, எங்கே வியாழேந்திரன் போகவில்லையா என்ற கேள்வி சமூக வலைத்தளங்களில் உலாவருவதானது ஒரு வேடிக்கையாகவுள்ளது. காரணம் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் காணிகளையும், தமிழர்களின் வழிபாட்டு தளங்களையும் அபகரித்ததும், அடித்து நொறுக்கியவர்களும் இவர்களை போன்றவர்களே என்பதை கூறிவைக்க விரும்புகின்றேன்.

இவ்வாறு சமூக வலைத்தளங்களில் எம்மை திரிவுபடுத்தி, மேற்கோள் காட்டி அதில் அரசியல் இலாபம் அடைய நினைப்பவர்களுக்கு ஒரு விடயத்தினை தெட்ட தெளிவாக கூற நினைப்பது என்னவென்றால் தமிழர்களை எதிர்த்து தமிழர்களின் அபிலாஷைகளை மறுத்து எப்போதும் நான் சிங்களவர்களோடு சேர்ந்து பயணிக்க போவதில்லை என்பதை கூறிக்க கொள்ள விரும்புவதோடு எந்த தேசிய கட்சிகளோடும் பேரம் பேசி எனது மக்களுக்கான நியாயத்தை பெற்று கொடுக்க முன் நிற்பேன்.

தமிழர்கள் தங்களது ஜனநாயகம் மறுக்க படுகின்ற போது அதை வேடிக்கை பார்த்து எம்போதும் நான் பின் நின்றதும் இல்லை. நிற்க போவதும் இல்லை. இதனாலேயே நான் மாற்று சமூகத்தினாலும், ஒருசில நல்லிணக்க வாதிகளாலும் இனவாதியாக பார்க்க படுகின்றேன். அதை பற்றி நான் எப்போதும் சிந்திப்பதில்லை. நான் எப்போதும் முன்னெடுப்பது பறிக்க பட்ட , முடக்க பட்டு கொண்டிருக்கும் தமிழர்களின் நியாயமான கோரிக்கையை மாத்திரமே.

எதிர்காலத்தில் இப்படிப்பட்ட காட்டுமிராண்டி தனங்கள் தமிழர்கள் மத்தியில் இடம் பெறுகின்ற திட்டமிட்டு திணிக்க படுகின்ற செயற்பாடுகள் நிறுத்த பட வேண்டும். வடகிழக்கு என்பது தமிழர்கள் அதிகம் இணைந்து வாழ்கின்ற பூமி. இருந்த போதிலும் அங்கு பாதிக்கப்படுவது அதிகம் தமிழர்களே. வடக்கு மற்றும் கிழக்கு சார்ந்த அரசியல் ரீதியான முன்னெடுப்பிற்கு எப்போதும் இதய சுத்தியுடன் நான் பயணிக்க என்னை தயார் படுத்தி வைத்திருப்பேன் என்பதை கூறிக்கொள்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: