தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கம் 0750973758 | மின்னஞ்சல் battimedialk@gmail.com

354 total views, 2 views today

மண்டூரில் இரண்டு குடும்பங்களிற்கிடையில் ஏற்பட்ட தகராற்றின் போது, ஒருவர் திடீரென உயிரிழந்தார் .

Share Now
  •  
  •  
  •  
  •  

அயல்வீட்டுக்காரர்களான இரண்டு குடும்பங்களிற்கிடையில் ஏற்பட்ட தகராற்றின் போது, ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். அவர் இயற்கை காரணங்களால் உயிரிழந்தாரா, தாக்கப்பட்டு உயிரிழந்தாரா என்பது தொடர்பில் விசாரணைகள் நடந்து வருகிறது.

வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டூர் பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றது.

இரண்டு குடும்பத்தினரும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, ஒருவர் மயக்கமடைந்துள்ளார். அவரை மண்டூர் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது, வழியில் உயிரிழந்தார்.

மூன்று பிள்ளைகளின் தந்தையாக முத்துலிங்கம் கிருபாகரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

அயல்வீட்டுக்காரர்கள் கற்களால் தாக்கியதிலேயே அவர் உயிரிழந்ததாக, அவரது குடும்பத்தினர் வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இதையடுத்து அயல்வீட்டுக்காரர் இருவர் சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரதேச பரிசோதனைகளிற்காக சடலம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இன்று பிரேத பரிசோதனை இடம்பெறும். இதன் பின்னரே கொலையா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியுமென வெல்லாவெளி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

355 total views, 3 views today


Share Now
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *