தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கம் 0750973758 | மின்னஞ்சல் battimedialk@gmail.com

வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவியான கெங்காதரன் ஹரிஸ்ணவியின் வழக்கு விசாரணை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

[vifblike]

 223 Total views

வவுனியாவில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் வீட்டில் தனியாக இருந்தபோது பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவியான கெங்காதரன் ஹரிஸ்ணவியின் (14) வழக்கு விசாரணை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

நேற்று (30) வவுனியா நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள நிலையில் எவ்வித முன்னேற்றமும் இன்றி எதிர்வரும் ஜனவரி 06 ஆம் திகதிக்கு வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஹரிஸ்ணவியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் குறித்து ஹரிஸ்ணவியின் உறவினர்கள் தெரிவிக்கும் போது,

கடந்த 2016 ஆம் ஆண்டு பாலியல் வன்புணர்விற்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள ஹரிஸ்ணவியின் வழக்கு விசாரணைகள் திகதியிடப்பட்டு செல்லப்படுகின்றதே தவிர, வழக்கு விசாரணைகளில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் காலதாமதம் ஏற்படுகின்றதே தவிர குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை.

இன்று இடம்பெற்ற விசாரணைகளின் போதும் சட்டமா அதிபரிடம் இருந்து குற்றப்பத்திரம் வராமையால் வழக்கு ஜனவரி 6 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கடந்த வழக்கு விசாரணைகளின் போதும் குற்றப்பத்திரத்தை விரைவில் தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் வழக்கு விசாரணைகளில் எவ்வித முன்னேற்றங்களும் எற்படவில்லை.

இந்நிலையில் கடந்த 3 வருடங்கள் கடந்த நிலையிலும் இன்று வரையிலும் வழக்கில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட ஹரிஸ்ணவிக்கு நீதி கிடைக்கவில்லை குற்றவாளி சமூகத்தில் நடமாடிக் கொண்டிருக்கின்றார் என்று கண்ணீருடன் உறவினர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

மாணவி ஹரிஸ்ணவி சார்பில் மனிதவுரிமை அபிவிருத்திக்கான நிலையத்தைச் சேர்ந்த சட்டத்தரணி அனிஸ் மன்றில் முன்னிலையாகி வழக்கை நெறிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: