தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கம் 0750973758 | மின்னஞ்சல் battimedialk@gmail.com

153 total views, 2 views today

கல்குடாவில் தொகுதியில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகம் திறந்தார். .முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.எஸ்.ஜெயானந்தமூர்த்தி.

Share Now
  •  
  •  
  •  
  •  

கல்குடா தொகுதிக்கான சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அங்குரார்ப்பண கூட்டம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தியின் வாழைச்சேனை இல்லத்தில் நேற்று (1) நடைபெற்றது.

இந் நிகழ்வில் நாட்டின் பாதுகாப்பு, பிரதேச அபிவிருத்தி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் எதிர்கால அரசியல் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

இந் நிகழ்வில் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் இணைப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் இ.டி.டபிள்யு.சொய்சா கலந்துகொண்டார்.

இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி பின்வருமாறு கருத்து தெரிவித்தார்,

வாய்ப்பேச்சில் மட்டுமே அரசியல் நடாத்தி சேவை செய்வதாக கூறிக்கொண்டிருக்கின்றனர். வெளிநாடுகளுக்கு சென்று புலம்பெயர்ந்த மக்களிடம் ஏமாற்று கதைகளை கூறி அங்கிருந்து பெரும் தொகை பணங்களை பெற்று வந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்றார்.

இணைப்பாளர் ஜெனரல் சொய்சா உரையாற்றும்போது, ஒரு நாடு அபிவிருத்தி காண வேண்டுமாயின் அந் நாட்டிற்கு தகுதியான தலைவர் ஒருவர் இருக்க வேண்டும். இந் நாட்டினை சந்தோஷமாகவும் இனப் பாகுபாடின்றி ஆட்சி செய்ய கோட்டாபய ராஜபக்ஷவிற்கு நீங்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றார்.

154 total views, 3 views today


Share Now
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *