தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கம் 0750973758 | மின்னஞ்சல் battimedialk@gmail.com

141 total views, 2 views today

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி வேட்பாளரிடம் இருந்து ஒரு எழுத்துப்பூர்வ உடன்பாட்டைக் கோருவதற்கான அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளது.

Share Now
  •  
  •  
  •  
  •  

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி வேட்பாளரிடம் இருந்து ஒரு எழுத்துப்பூர்வ உடன்பாட்டைக் கோருவதற்கான அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை கடந்த வாரம் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியது. இருப்பினும் எதிர்வரும் நாட்களில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால் தேர்தலில் தங்கள் ஆதரவைப் பெற எந்தவொரு அரசியல் கட்சியுடனும் எந்தவொரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திடும் எண்ணம் தனக்கு இல்லை என்று ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சஜித் பிரேமதாசவிடமிருந்து அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்க முடிவு செய்யும் எந்தவொரு வேட்பாளரிடமிருந்தும் எழுத்துப்பூர்வ உத்தரவாதத்தை பெறவேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளனர்.

குறிப்பாக தமிழர்களுக்கு ஒரு அரசியல் தீர்வைக் கொண்டுவரும் புதிய அரசியலமைப்பிற்கு சஜித் எழுத்துப்பூர்வமாக உறுதிப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். ஏனெனில் கடந்த தேர்தலின்போது வழங்கப்பட்ட வாக்குறுதிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளமையே காரணம்.

இந்த விடயங்கள் தொடர்பாக அண்மையில் கருத்து தெரிவித்திருந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, “தமிழர்கள் தொடர்பான பல பிரச்சினைகள் உள்ளன, அவற்றினை ஜனாதிபதி வேட்பாளர்கள் தீர்ப்பதாக ஒப்புக் கொள்ள வேண்டும்” என கூறியிருந்தார்.

மேலும் இனப்பிரச்சினைக்கு தீர்வினை வழங்கும் வேட்பாளருக்கு ஆதரவு என்றாலும் கட்சி சார்பாக இதுவரை இவருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பாக இறுதி செய்யப்படவில்லை என்றும் கூறினார்.

அத்தோடு தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேட்பாளர்களிடமிருந்து கிடைக்கும் திட்டங்களை பரிசீலித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடல்களை நடத்திய பின்னரே கூட்டமைப்பு இறுதி முடிவை எடுக்கும் என்றும் மாவை சேனாதிராஜா தெரிவித்திருந்தார்.

அந்தவகையில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்களுக்கு இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்தின் கீழ் ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயல்முறை தொடர வேண்டும் என கூட்டமைப்பு கோரியிருந்தது.

சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின்போது, தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு, பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சேர்க்கப்படும் என்று ஐக்கிய தேசிய கட்சியும் உறுதியளித்தது.

இதேவேளை ஏற்கனவே தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வு உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகளை ஐக்கிய தேசிய கட்சி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

142 total views, 3 views today


Share Now
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *