தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கம் 0750973758 | மின்னஞ்சல் battimedialk@gmail.com

ஹட்டன் ஸ்ரீபாத வித்யாலயத்தின் ஆங்கில ஆசிரியையை ஒரு வாரமாக காணவில்லை. பொலிசார் தேடுதல்.

[vifblike]

 623 Total views

ஹட்டன் ஸ்ரீபாத வித்யாலயத்தின் ஆங்கில ஆசிரியை காணாமல் போய் ஒரு வாரமாகியும் எந்த தடயமும் கிடைக்காமல் பொலிசார் திண்டாடி வருகின்றனர்.

அட்டனிலுள்ள பாடசாலையிலிருந்து கம்பொலவின் கீரபன பகுதிக்கு வந்த, சண்திம நிசன்சலா ரத்நாயக்க (27) என்ற இளம் ஆசிரியையே காணாமல் போனார். கடந்த 1ம் திகதி மாலை 4 மணியளவில் வீட்டுக்கு அண்மையிலுள்ள சிசிரிவி கமராவில் அவரது வீடு திரும்பும் காட்சி பதிவாகியிருந்தது. குடை பிடித்தபடி வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

எனினும், சுமார் 100 மீற்றர் தொலைவிலுள்ள வீட்டை அவர் அடைந்திருக்கவில்லை.

இது தொடர்பாக, ஆசிரியையின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர். காணாமல் போன ஆசிரியை, கம்பொல் பொலிஸ் நிலைய பதில் அதிகாரியொருவருடன் நிச்சயதார்த்தமும் ஆகியிருந்தார்.

இந்த நிலையில் பொலிசார் பல்வேறு கோணங்களிலும் புலன்விசாரணைணை முடுக்கி விட்டும், எந்த தடயமும் கிட்டவில்லை.

இதற்கிடையில், கண்டியில் இருந்து வத்தேகம நோக்கி செல்லும் மகாவலி ஆற்றில் இளம் பெண்ணொருவரின் உடல் மிதப்பதாக அந்த பகுதி மக்களால் தெரிவிக்கப்படும் தகவல் மீது பொலிசாரின் கவனம் தற்போது குவிந்துள்ளது.

அந்த சடலம் நட்டரம்பத வெவெல்லவில் உள்ள போல்கொல்ல நீர்த்தேக்கத்தில் மிதப்பதாக கம்பொல பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து, தற்போது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலம் பழுதடைந்துள்ளதால், உடனடியாக அடையாளம் காண முடியவில்லை.

அந்த சடலம் ஆசிரியையினுடையதா என்பதை உறுதி செய்யும் முயற்சியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: