தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கம் 0750973758 | மின்னஞ்சல் battimedialk@gmail.com

இனவாதம் பேசும் வேட்பாளர்கள் யார் என்று இந்த நாட்டு மக்களுக்கு தெரியும்- அமைச்சர் வடிவேல் சுரேஸ்

இனவாதம் பேசும் வேட்பாளர்கள் இந்த நாட்டு மக்கள் அவ்வளவு மடையர்கள் அல்லர் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் கடந்த காலங்களில் இனவாதத்தை தூண்டி விட்டவர்கள் யார் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். அவ்வாறு இனவாதத்தைத் தூண்டியவர்கள் எந்த வேட்பாளரின் பக்கம் உள்ளார்கள் என்பதையும் மக்கள் தெரியாதவர்கள் அல்லர்.

யாழ்ப்பாண விமான நிலைய பெயர்ப் பலகையில் தமிழ் பெயர் முதலாவது இடப்பட்டதற்காக தூக்கிப்பிடித்துள்ளவர்களின், யாழ்ப்பாண கட்சிக் காரியாலயத்தின் பெயர்ப் பலகை தமிழ் மொழியில் தான் உள்ளது. யாழ்ப்பாண வாக்குகளை பெறுவதற்கு ஒரு விதத்தில் பேசும் இவர்கள், சிங்கள பௌத்த வாக்குகளைப் பெறுவதற்கு வேறு விதத்தில் பேசுகின்றனர்.

சிங்கள பௌத்த மக்களுக்கு கண்டி தலதா மாளிகையை விட சிறந்த ஒரு இடம் இருக்கின்றதா? அவ்வாறான இடத்துக்கு குண்டுத் தாக்குதல் நடாத்தியவர்கள் இன்று யாருடன் இருக்கின்றார்கள். இவர்களுக்கு சிங்கள பௌத்த மக்கள் வாக்களிப்பார்களா? தலதா மாளிகையின் மீது தாக்குதல் நடாத்திய பிள்ளையான், கருணா அம்மான் இருக்கும் தரப்புக்கு இம்மக்கள் வாக்களிப்பார்களா? எனவும் அவர் வினா எழுப்பியுள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: