தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கம் 0750973758 | மின்னஞ்சல் battimedialk@gmail.com

144 total views, 2 views today

தபால் மூல வாக்களிப்பின் முதலாவது நாளில் எந்தவித பாரிய தேர்தல் சட்ட மீறல் சம்பவங்களும் பதிவாகவில்லையென கெபே அமைப்பு அறிவித்துள்ளது.

Share Now
  •  
  •  
  •  
  •  

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின் முதலாவது நாளான நேற்று (31) எந்தவித பாரிய தேர்தல் சட்ட மீறல் சம்பவங்களும் பதிவாகவில்லையென கெபே அமைப்பு அறிவித்துள்ளது.

இன்றைய நாள் நாட்டின் சகல மாவட்டங்களுக்கும் தமது கண்காணிப்பாளர்களை அனுப்பி கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டதாக அவ்வமைப்பின் பணிப்பாளர் சுரங்கி ஆரியவங்ச தெரிவித்துள்ளார்.

தமது அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட நடமாடும் சேவையின் போது, சில வாக்களிப்பு மத்திய நிலையங்களுக்கு அருகாமையில் சட்ட விரோதமான போஸ்டர்கள் சில ஒட்டப்பட்டிருந்ததாகவும், சில இடங்களில் சட்டவிரோதமான முறையில் பிரச்சார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததையும் அறியமுடிந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இது தவிர, வேறு பாரிய அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறவில்லையெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

145 total views, 3 views today


Share Now
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *