தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கம் 0750973758 | மின்னஞ்சல் battimedialk@gmail.com

செங்கலடி குமாரவேலியார் கிராம சித்திவிநாயகர் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழாவும் சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வும் பாடசாலையின் அதிபர் திருமதி.சுதாகரி மணிவண்ணன் தலைமையில் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

[vifblike]

 120 Total views

செங்கலடி குமாரவேலியார் கிராம சித்திவிநாயகர் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழாவும் சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வும் பாடசாலையின் அதிபர் திருமதி.சுதாகரி மணிவண்ணன் தலைமையில் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்விற்கு கௌரவ அதிதிகளாக ஆரம்பக்கல்வி உடற்கல்விப்பணிப்பாளரி திரு.க.யோகராஜா, பாடசாலையின் முன்னாள் அதிபரும் தற்போதைய வந்தாறுமூலை விஸ்னுமகா வித்தியாலயத்தின் அதிபரும் திரு.எஸ்.மோகன், பணிமுதிர்வு பெற்ற அதிபர் திருமதி.சந்தமலர் கமலநாதன் ஆகியோர் மற்றும் செங்கலடி மத்திய கல்லுரி அதிபர், கொம்மாதுறை சித்திவிநாயகர் வித்தியாலய அதிபர், வேல்ட்விசன் உத்தியோகத்தர், பாடசாலையின் ஆசிரிய, மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

நிகழ்வின் முதலாவதம்சமாக “தாமரை” சஞ்சிகை நூல் வெளியிடப்பட்டது இதன்போது சஞ்சிகையின் முதலாவது சஞ்சிகையினை அதிதி திரு.க.யோகராஜா அவர்களிடம் கையளிக்கப்பட்டதுடன் அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கும் சஞ்சிகை நூல் வழங்கிவைக்கப்ட்டமையும் சிறப்பம்சமாகும்.

இதன் போது பாடசாலையில் பாடவிதானங்கள், விளையாட்டத்துறை, என பலவற்றிலும் திறமைவாய்ந்த மாணவர்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: