தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கம் 0750973758 | மின்னஞ்சல் battimedialk@gmail.com

136 total views, 2 views today

முன்னாள் கல்முனை மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவர் ‘எல்லைக்காவலன்’ ஏகாம்பரம் கட்சி தாவினார்.

Share Now
  •  
  •  
  •  
  •  

தமிழரசுக்கட்சியின் மிகநீண்டகால மூத்த உறுப்பினரும் முன்னாள் கல்முனை மாநகரசபையின் எதிர்க்கட்சித்தலைவருமான ‘எல்லைக்காவலன்’ ஏகாம்பரம் (87). கோட்டாபய ராஜபக்சவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழர்கள் தப்பிப்பிழைக்க வேண்டுமென்றால், ஆட்சியை மாற்ற வேண்டுமென்றும் தெரிவித்தள்ளார்.

கோட்டாவை ஆதரிப்பது குறித்து ஏகாம்பரம் கருத்து தெரிவித்தபோது,

அம்மா என்றாலும் பெண்தான் மகள் என்றாலும் பெண்தான். தமிழ் மக்களைப் பொறுத்தவரை சுதந்திரக்கட்சியும் ஒன்றுதான் ஜ.தே.கட்சியும் ஒன்றுதான். அதேபோல் மஹிந்தவும் சரி ரணிலும் சரி, இருவரும் ஒன்றுதான்.

அனைவரும் சிறுபான்மையினரைப் பிரித்து துரோகம் செய்தவர்களே. அடக்கிஆண்டவர்களே. எனினும் இன்றையநிலையில் தேர்தலை பகிஸ்கரிக்காது வாக்களிக்க வேண்டும். எனவே இந்த இருதரப்பில் ஓரளவாவது யார் நல்லவர் என்று பார்த்து வாக்களிக்க வேண்டியது எமது கடமை. எமது தலைவர்கள் நிதானமாக யோசிக்கட்டும்.

1951களில் சமஸ்டியை தரபுறப்பட்டவர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க. அப்போது பாதயாத்திரைசெய்து பண்டா-செல்வா ஒப்பந்தத்தை கிழித்தெறிந்தவர் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்த்தன. அவர் வேறுயாருமல்ல பிரதமர் ரணிலின் மாமனார்.

தமிழர்களின் சாத்வீகப் போராட்டத்தை அடக்கியவர் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச. அவரின் மகனே இன்று மறுவடிவம் தாங்கிவருகிறார்.

இதுவரை சிறுபான்மையினரை பாதுகாப்போம் என்று ஒருவார்த்தையாவது அவர் சொன்னாரா? இல்லை. கோத்தா சொன்னார்.

தமிழர் தப்பிப்பிழைக்க வேண்டுமானால் இந்த சமகால ஆட்சியை மாற்றியமைக்க வேண்டும். எனவே எனது பூரண ஆதரவு கோத்தாபாயவிற்கே. தமிழ்மக்களும் அதனையே தெரிவு செய்ய வேண்டும். இல்லாவிடில் இருண்ட யுகத்திற்கு செல்ல வேண்டி நேரிடும் என்றார்.

தமிழ் அரசுக்கட்சியின் மத்திய குழு உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

137 total views, 3 views today


Share Now
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *