தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கம் 0750973758 | மின்னஞ்சல் battimedialk@gmail.com

இந்திய அரசின் நிதி உதவியுடன் மட்டக்களப்பு விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது-விமான போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

[vifblike]

 14 Total views

இந்திய அரசின் நிதி உதவியுடன் மட்டக்களப்பு விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார் தொழில்துறை ஏற்றுமதி, முதலீட்டு ஊக்குவிப்பு, சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க.

கொழும்பிலுள்ள இந்தியத் தூதர் தரண்ஜித் சிங் உடனான கலந்துரையாடலின்போது, மட்டக்களப்பு விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதில் இந்தியா ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது, இந்தியாவிலிருந்து நேரடி விமான சேவைகள் கட்டுநாயக்க, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையங்களிற்கு இடம்பெறுகிறது. விரைவில் மூன்றாவதாக, மட்டக்களப்பிற்கும் நேரடி விமான சேவை இடம்பெறுமென அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு விமான நிலையம் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையால் 1958 இல் நிறுவப்பட்டது. யுத்தத்தையடுத்து, இலங்கை விமானப்படை 1983 மார்ச் 27 அன்று விமான நிலையத்தை கையகப்படுத்தியது. பின்னர் இலங்கை விமானப்படை தளமாக செயல்பட்டது.

மீண்டும் 2018 மார்ச் 25, அன்று இது சிவில் விமானப் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது. தற்போது உள்நாட்டு விமானசேவைகள் தினமும் காலை 08.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை இயக்கப்படுகின்றன.

மட்டக்களப்பு விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்குமாறு அமைச்சர் பிரசன்ன ரனதுங்க ஏற்கனவே விமானப் போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: