தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கம் 0750973758 | மின்னஞ்சல் battimedialk@gmail.com

பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல புலமைப்பரிசில் மற்றும் மாணவர் உதவித்தொகை என்பவற்றை எதிர்வரும் திங்கட்கிழமை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

[vifblike]

 10 Total views

பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல புலமைப்பரிசில் மற்றும் மாணவர் உதவித்தொகை என்பவற்றை எதிர்வரும் திங்கட்கிழமை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மஹாபொல புலமைப்பரிசில் மற்றும் மாணவர்களுக்கான உதவித்தொகை ஆகியவற்றை அதிகரித்தல் உள்ளிட்ட 06 கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

ஊர்வலமாக வருகை தந்த மாணவர்கள் ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் ஒன்றுகூடி தமது எதிர்ப்பை தெரிவித்தனர். இவ்விடயம் பற்றி அறிந்த ஜனாதிபதி, மாணவர்களுக்கு எவ்வித தடைகளையும் ஏற்படுத்தாது அவர்களை ஜனாதிபதி செயலக வளாகத்திற்கு வருகை தருவதற்கு வழிவிடுமாறு பாதுகாப்புத் துறையினருக்கு பணிப்புரை வழங்கினார்.

ஜனாதிபதியும் ஜனாதிபதியின் செயலாளரும் ஏற்கனவே திட்டமிடப்பட்ட கடமையின் நிமித்தம் வெளியே சென்றிருந்தமையினால் மாணவர்களுடன் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் மற்றும் உயர்கல்வி அமைச்சின் அதிகாரிகள் கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

இதன்போது நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்குரிய மஹாபொல புலமைப்பரிசில் மற்றும் மாணவர் உதவித்தொகையை எதிர்வரும் திங்கட்கிழமை செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: