தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கம் 0750973758 | மின்னஞ்சல் battimedialk@gmail.com

கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம்,விமர்சகர்களையும் மனித உரிமை செயற்பாட்டாளர்களையும் குறிவைத்து அடக்குமுறையைத் தூண்டும் செயலை கட்டவிழ்த்துவிட்டுள்ளது -சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள்.

[vifblike]

 8 Total views

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கம், விமர்சகர்களையும் மனித உரிமை செயற்பாட்டாளர்களையும் குறிவைத்து அடக்குமுறையைத் தூண்டும் செயலை கட்டவிழ்த்துவிட்டுள்ளதாக சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கூட்டாக கண்டனம் தெரிவித்துள்ளன.

“இலங்கையை இராணுவ மயமாக்குவதற்கும், பாதுகாப்பதற்கும்” இந்த மூலோபாயத்தை மேற்கொள்வதாகக குற்றம் சாட்டியுள்ளது.

சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் (ஐ.டி.ஜே.பி) மற்றும் இலங்கையில் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் (ஜே.டி.எஸ்) ஆகிய அமைப்புக்கள், இலங்கையில் உள்ள ஆர்வலர்களின் உதவியுடன் திரட்டிய தரவுகள் மற்றும் தங்கள் சொந்த பாதுகாப்புக்காக அடையாளத்தை வெளியிட முடியாத இலங்கையின் இரண்டு மனித உரிமைகள் அமைப்புக்களும் இணைந்து இந்த அறிக்கையை ஆவணப்படுத்தியுள்ளன.

பத்திரிகையாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சட்டத்தரணிகள், கல்வியாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியினரை குறிவைத்து தேர்தலுக்கு முன்னும் பின்னும் 69 மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல்கள் சம்பவங்கள் நடந்துள்ளதாக அந்த அமைப்புக்கள் தொகுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில சந்தர்ப்பங்களில் அச்சுறுத்தல்கள் மிகவும் தீவிரமாக இருந்தன, அச்சுறுத்தலுக்குள்ளானவர்கள் நாட்டை விட்டு வெளியேறி விட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பொறுப்புக்கூறலை மேற்கொள்வதற்கான எந்தவொரு முயற்சியையும் அகற்றுவதற்கான நடவடிக்கைகளையே நாம் காண்கிறோம். அதிநவீன மற்றும்
ஊடுருவும் கண்காணிப்பு முறைமையின் மூலம் இலங்கை குடிமக்களின் எல்லைகள் சுருக்கப்பட்டுள்ளன” என்று ITJP இன் நிர்வாக இயக்குனர் யஸ்மின் சூகா குறிப்பிட்டுள்ளார்.

கோட்டபய ராஜ்பக்ஸ முன்னாள் இராணுவ அதிகாரிகளை உயர் பதவிகளுக்கு நியமிப்பதன் மூலம் அரசாங்கம் முழுவதும் தனது கூடாரங்களை எவ்வாறு பரப்பியுள்ளார் என்பதையும், காவல்துறை மற்றும் உளவுத்துறை நடவடிக்கைகளை அதிகளவில் இராணுவமயமாக்கியதையும் இந்த அறிக்கை விளக்குகிறது. கடந்த கால குற்றங்களை விசாரிப்பதில் ஈடுபட்டவர்கள் தங்கள் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

“முன்னர் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் அல்லது போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர்கள் இப்போது மீண்டும் பதவியில் உள்ளனர் என்று ஜே.டி.எஸ்ஸின் பஷன அபேவர்தன குறிப்பிட்டுள்ளார். இது மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்களை மௌனமாக்கும் நடவடிக்கை என்றும் விமர்சித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: