தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கம் 0750973758 | மின்னஞ்சல் battimedialk@gmail.com

தைப்பொங்கல் விழா கொண்டாடுவது வீண் செலவா? வன்மையாக கண்டிக்கிறார் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்.

[vifblike]

 14 Total views

தைப்பொங்கல் விழா கொண்டாடுவது வீண் செலவு என அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்ததை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இவ்வருடம் அவ்வாறு தேசிய ரீதியாக தைப்பொங்கலை  மேற்கொள்வதில்லை என்றும், அவ்வாறு செய்வதால் வீண் செலவுகள் ஏற்படுவதாகவும் ராஜாங்க அமைச்சர் துமிந்த திஸநாயக்க தெரிவித்ததாகப் பத்திரிக்கை மூலமாக அறிந்ததாக குறிப்பிட்டார் .

மேலும், சுதந்திர தினத்தன்று தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படமாட்டாது அக்கீதம் சிங்கள மொழியில் மாத்திரம் இசைக்கப்படும் என்று அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் கூறியதையும் நினைவுபடுத்தினார்.

இப்படியான செயற்பாடுகள் இந்நாட்டின் தேசிய இனங்களில் ஒன்றான தமிழ் மக்களின் மனங்களைக் காயப்படுத்துவதாகவே அமையும். ஏற்கனவே, தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை, தமிழ்க்கைதிகள் விடுவிக்கப்படாமை தொடர்பாக மனக் காயப்பட்டுள்ளார்கள். மேலும் மேலும் தமிழர்களின் மனங்களைக் காயப்படுத்துவது தேசிய நல்லிணக்கத்தைத் திட்டமிட்டு மறுப்பதாகவே அமையும் .

‘பேரினமே இந்நாட்டின் ஓரினம்’ ‘இந்நாடு சிங்கள பௌத்த நாடு’ போன்ற பேரினவாத வாயாடல்களை ஏனைய தேசிய இனங்கள் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?.

கடந்த அரசாங்கம் தேசிய நல்லிணக்கத்தின் ஓர் அடையாளப்படுத்தலாக தமிழர்களின் உழவர்களின் தைப்பொங்கலை தேசிய ரீதியில் முக்கியத்துவப்படுத்தியும், கௌரவப்படுத்தியும் மேற்கொண்டமை முற்போக்கான கருமமாக தமிழ் மக்களால் நோக்கப்பட்டது.

முற்போக்கான சிந்தனைகள் பேரினவாதத்தால் மூழ்கடிக்கப்படுவதை வாய்வீச்சு அரசியல் வாதிகள் கண்டும் காணாமல் வாய் மூடிகளாக இருப்பதைத் தமிழ் மக்கள் அறிவார்கள். இவ்வரசாங்கம் பல்லின மக்களின் அரசாங்கமாகச் செயற்பட வேண்டும் என்பதே ஏனைய தேசிய இனங்களின் விருப்பமாகும். அரசாங்கத்தின் ஓரின மனப்பாங்கு பல்லின மனப்பாங்காக மாற்றமடைய வேண்டும் . இல்லையேல் தேசிய நல்லிணக்கம் வெறும் பேச்சில் மட்டுமே இருக்கும். புதிய அரசாங்கத்தால் முன்னைய அரசாங்கத்தினை விட இரட்டிப்பான சுதந்திரம் இருக்குமென மட்டக்களப்புத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார் . மேற்படி விடயங்களும் இரட்டிப்பான சுதந்திரங்களில் அடங்குமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: