தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கம் 0750973758 | மின்னஞ்சல் battimedialk@gmail.com

ஆஸர்பைஜானில் உயிரிழந்த மாணவிகள் மூவரினதும் சடலங்களை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு தலா 15 இலட்சம் ரூபா நிதி உதவி.

[vifblike]

 1 Total views

ஆஸர்பைஜானில் உயிரிழந்த மாணவிகள் மூவரினதும் சடலங்களை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தலா 15 இலட்சம் ரூபா நிதியை வழங்க தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஆஸர்பைஜானின் தனியார் பல்கலைக்கழகமொன்றில் கல்வி பயின்ற இலங்கை யுவதிகள் மூவர் தங்களது தங்குமிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக உயிரிழந்தனர்.

குறித்த யுவதிகளை இலங்கைக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளுக்காக அரசு குறித்த நிதியை வழங்குவதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன உயிரிழந்த மாணவிகளின் பெற்றோர்களிடம் அறிவித்துள்ளார்.

மாணவிகளின் பெற்றோர்கள் வெளிவிவகார அமைச்சுக்கு வருகை தந்து அமைச்சரை சந்தித்த வேளையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: