ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளை கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்குமாறு கோரிக்கை.

0
22

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயுமாறு, குடும்பநல சுகாதார பணியகம் சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு இதுவரை சைனோபார்ம் தடுப்பூசி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்று குடும்பநல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் விசேடவைத்திய நிபுணர் டொக்டர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார்.

இதுவரை, 13 கர்ப்பிணித் தாய்மார்கள் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர்.

மேலும், இதுவரை கிட்டத்தட்ட 2,500 கர்ப்பிணித் தாய்மார்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த விசேடவைத்திய நிபுணர், கொரோனா தொற்றுக்குள்ளான 175 கர்ப்பிணித் தாய்மார்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்றும் குறிப்பிட்டார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here