அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை வைத்தியசாலைகளில் கொவிட்-19 தொற்றாளர்களுக்கான சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு.

0
52

அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் ஏற்படுத்தப்பட்டுள்ள 40 கட்டில்களைக் கொண்ட கொவிட்-19 தொற்றாளர்களுக்கான சிகிச்சை நிலையம், வைபவ ரீதியாக இன்று (21) திறந்து வைக்கப்பட்டது.

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ. சுகுணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஏ.ஆர்.எம். தௌபீக் அதிதியாகக் கலந்துகொண்டு, சிகிச்சை நிலையத்தை திறந்து வைத்தார்.

கல்முனைப் பிராந்தியத்தில் கொவிட்-19 சிறு தொற்றாளர்கள், நோய் அறிகுறிகளற்ற நோயாளர்கள் மற்றும் தொற்றினால் பாதிக்கப்படும் சுகாதார அதிகாரிகள் ஆகியோரை தங்க வைத்து பராமரிப்பதற்கான ஒரு வைத்தியசாலையாக ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.

அத்துடன், அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலையிலும் 100 கட்டில்களைக் கொண்ட கொவிட்-19 சிகிச்சை நிலையமாக ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், இவ்விரு வைத்தியசாலைகளிலும் தொற்றினால் பாதிக்கப்படும் ஆண், பெண் இருபாலாரும் அனுமதிக்கப்படுவார்களெனவும் தெரிவித்தார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here