அக்கரைப்பற்று வாசி ஆமைகளுடன் கைது.

0
44

அம்பாறை அக்கரைப்பற்று வாவியில் இருந்து சட்டவிரோதமாக ஆமைகளை பிடித்து இறைச்சியாக்கி நீண்டகாலமாக விற்பனை செய்து வந்த அக்கரைப்பற்று கண்ணகிபுரத்தைச் சேர்ந்த ஒருவர் 16 பால் ஆமைகளை மோட்டார் சைக்கிளில் இன்று (10) மாலை எடுத்துச் சென்ற போது கைது செய்யப்பட்டதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.

மாவட்ட சிவேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய மக்கள் தொடர்பாடல் மற்றும் கொரோனா தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.எம். சதாத் தலைமையிலான பொலிசாருடன் விசேட புலனாய்வு பிரிவினர் இணைந்து சம்பவ தினமான இன்று மாலை 5 மணியளவில் அக்கரைப்பற்று நகர் பகுதில் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் அக்கரைப்பற்று வாவியில் இருந்து ஆமைகளை பிடித்து உறைப் பையில் போட்டு மோட்டார் சைக்கிளில் எடுத்துக் கொண்டு கண்ணகிபுரத்திற்கு சென்ற போது அக்கரைப்பற்று நகர் பகுதியில் வைத்து குறித்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி அவரை மடக்கி பொலிசார் பிடித்தனர்.

இதன்போது மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்ற உறைப் பையை சோதனையிட்டதில் அதில் இருந்து 16 பால் ஆமைகளை கண்டு பிடிக்கப்பட்ட நிலையில் அவர் செய்யப்பட்டுள்ளார்.

இதில் கைது செய்யப்பட்டவர் அக்கரைப்பற்று கண்ணகிபுரத்தைச் சேர்ந்தவர் எனவும் இவர் ஆமைகளை சட்டவிரோதமாக பிடித்து இறைச்சியாக்கி அதனை அம்பாறை நகரிலுள்ள ஹோட்டல்களுக்கு நீண்ட காலமாக விற்பனை செய்து வருதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here