அக்கரைப்பற்று வைத்தியசாலை வைத்தியர்கள் அடையாள வேலை நிறுத்தம்.

0
34

அக்கரைப்பற்று  ஆதார வைத்தியசாலையின் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் . நேற்று (08) காலை 8 மணி முதல் பகல் 12 மணிவரை அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டனர்.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஐ.எம். ஜவாஹிரின் நிருவாக முறைகேடுகள், நிருவாக அடக்குமுறைகள், கொவிட் -19 தொடர்பான தவறான நிருவாக நடைமுறைகள்மூலம் நோயாளிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய அவரது செயற்பாடுகளை கண்டித்தும் அவருக்கு எதிரான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தை கேட்டு போதுமான கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் முன்னேற்றகரமான செயற்பாடுகள் எதுவும் இடம்பெறவில்லை.

இந்நிலையில் இன்று அடையாள வேலை நிறுத்தத்தை மேற்கொள்வதற்கு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தள்ளப்பட்டுள்ளது என்பதை மனவருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதில் வெளிநோயாளர் பிரிவு மற்றும் கிளினிக் என்பன முற்றாக தடைப்படுவதுடன் அவசரசிகிச்சை, டயலைசிஸ், மகப்பேறு மற்றும் சிறுவர் சிகிச்சைப் பிரிவுகள் என்பன வழமைபோல் இயங்குகின்றன. எங்களின் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தினால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு எமது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here