அடிப்படைவாத வகுப்புகளில் கலந்துகொண்ட மற்றுமொருவர் கைது.

0
22

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் தற்கொலைதாரியான சஹ்ரான் ஹாசிம் மற்றும் அவரை பின்தொடந்தவர்களால் நடத்தப்பட்ட அடிப்படைவாத வகுப்புகளில் கலந்துகொண்ட மற்றுமொருவர் நாரம்மல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட அடிப்படைவாத வகுப்புகளில் சந்தேகநபர் கலந்துகொண்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது நாரம்மல பகுதியை சேர்ந்த 24 வயதான மொஹமட் ஷியாம் என்ற இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

சந்தேகநபர் கொச்சிக்கடை – தலுகொட்டுவ பகுதியை வசிப்பிடமாக கொண்டுள்ளார். அடிப்படைவாத வகுப்புகளில் கலந்துகொண்ட 14 பேர் இதுவரையிலும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here