அடுத்த நூற்றாண்டில் ஆசியாவில் எழுச்சியை சீனா வழிநடத்தும்- பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

0
29

நீண்ட வரலாற்றில் சீனா எம்முடன் செயற்பட்டுள்ள விதத்திற்கு அமைய சீனா எமக்குள்ள உண்மையான நண்பர் என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சீனா எமது வரலாற்று நட்பு நாடாகும் என்றார்.

“சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் விதமாகவும், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால இராஜதந்திர உறவை அங்கீகரிப்பதற்காக ஒரு நினைவு நாணயத்தை வெளியிடவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்” என்றார்.

சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் என்ற கருத்துக்களை மதிக்கும் மக்கள் இலங்கையில் வாழ்கின்றமையாலேயே சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் எங்களால் உறவுகளைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது என்று நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் பிரதமர் தெரிவித்தார். 

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100 வது ஆண்டு நிறைவையொட்டி, கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வெளியுறவுக் கொள்கை நிலைப்பாடுதான் சீனாவை உலக அரங்கிற்கு உயர்த்தியது என்பது எனக்குத் தெரியும் எனத் தெரிவித்த பிரதமர்,. இருப்பினும், சீனா தனது அரசியல் கருத்துக்களை உலகின் மத்தியில் திணிக்க ஒருபோதும் முயற்சிக்கவில்லை என்றார்.

ஒரு நாட்டின் சுதந்திரத்திற்கும் இறையாண்மைக்கும் இது மிகவும் முக்கியமானது. அந்த நாடுகளுக்கு தங்கள் சுதந்திரத்தை பேணி செயற்பட அனுமதித்ததனால் உலக நாடுகள் சீனாவுடன் வர்த்தகம் செய்ய தயங்கவில்லை. இலங்கையும் அதே போன்றுதான்.
அதனால்தான் உலகின் பல கதவுகள் சீனாவுக்கு திறக்கப்பட்டன.

சர்வதேச அளவில் சீனாவின் முன்னேற்றத்திற்கு அந்தக் கொள்கை மிகவும் முக்கியமானதாகும். அடுத்த நூற்றாண்டில் ஆசியாவில் எழுச்சியை சீனா வழிநடத்தும் என்பது தற்போது யதார்த்தமாகிவிட்டது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here