அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலை குறைக்கப்பட வேண்டும்- அமைச்சர் சமல் ராஜபக்ஷ

0
124

எரிபொருள் விலையேற்றம் தொடர்பாக கலந்தாலோசிக்க நேற்று திங்கட்கிழமை கூடிய அமைச்சரவை சந்திப்பிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்து கொள்ளவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அமைச்சர் விமல் வீரவன்சவும் அமைச்சரவை சந்திப்புக்கு சமூகமளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அமைச்சரவை சந்திப்பிற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமை தங்கியுள்ளார். குறிப்பாக இதில் கலந்து கொண்ட அமைச்சர் சமல் ராஜபக்ஷ, தற்போது அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலை குறைக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

இதற்கு அமைச்சர்கள் பலரும் சார்பான கருத்துக்களையே முன்வைத்துள்ளனர். எனினும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.

இச்சந்திப்பில் கலந்துகொண்ட எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில மெளனமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here