அதிக வீரியம் கொண்ட டெல்டா கொரோனா தொற்று தொடர்பான ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

0
24

அதிக வீரியம் கொண்ட டெல்டா கொரோனா தொற்று தொடர்பான ஆய்வுகள் நேற்று (12) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம், ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல் பீடத்தின் தலைவர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, சுகாதார அமைச்சால் வழங்கப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் 96 பேரின் மாதிரிகள் ஊடாக இந்த ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றார். நேற்றையதினம் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆய்வின் பெறுபேறுகளை எதிர்வரும் ஒரு வாரத்துக்குள் சுகாதார சேவை பணிப்பாளரிடம் கையளிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர், தெரிவித்தார்.

இதேவேளை,இலங்கையில் இதுவரை ​20 பேர் டெல்டா தொற்றுக்குள்ளாகி உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதில் அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ள அவர், இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களுள் பலர் குணமடைந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here