அதிபர் – ஆசிரியர்களின் தொழிற்சங்க போராட்டம் காட்டிக் கொடுக்கப்பட ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது.

0
16

அதிபர் – ஆசிரியர்களின் தொழிற்சங்க போராட்டம் காட்டிக் கொடுக்கப்பட ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என, இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பல்வேறு குரல் பதிவுகளை  வெளியிட்டு போராட்டத்தை சிலர் அடக்க முயற்சிப்பதாக அவர் கூறியுள்ளார்.

கல்வி அமைச்சின் செயலாளருடன்  ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகள் குறித்து இன்று (14) கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, ஆசிரியர்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்த  எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here