அத்தியாவசிய பொருள்களின் விலையேற்றம் தற்காலிகமானதே என்கிறார் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபன்.

0
10

அத்தியாவசிய பொருள்களின் விலையேற்றம் நிரந்தரமானதல்ல மாறாக தற்காலிகமானதே என, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் தெரிவித்தார்.

வவுனியா – ஆச்சிபுரம் கிராமத்தில் அமைக்கப்படவுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இன்று (11) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர்,  கொரோனா காரணமாக ஏற்பட்ட வீழ்ச்சியால், அரசாங்க ஊழியர்களுக்கு கூட சம்பளத்தை வழங்க முடியாது அரசாங்கம் திண்டாடுகின்றது. அதனால்தான் அத்தியாவசிய பொருள்களின் விலையேற்றமும் இடம்பெற்றுள்ளது. இது நிரந்தரமானதல்ல. தற்காலிகமானதே எனவும், திலீபன் தெரிவித்தார்.

அத்துடன், இந்தியாவின் அழுத்தத்தால் மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கவில்லை என தெரிவித்தார்.

தீர்க்கமான முடிவெடுக்ககூடிய மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் உள்ள அரசாங்கம், அனைத்து உறுப்பினர்களுடனும் கலந்துரையாடியே இந்த தேர்தலை நடத்துவதென தீர்மானித்துள்ளது எனவும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here