டொலர் தட்டுப்பாடு காரணமாக பல அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் எதிர்வரும் 3 அல்லது 4 மாதங்களில் அரச வைத்தியசாலைகளில் உள்ள மருந்தகங்கள் மற்றும் சத்திரசிகிச்சை அரங்குகளில் பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக அரச மருந்து கூட்டுத்தாபனம் எச்சரித்துள்ளது.
அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர், அரச மருந்து விநியோகம் மற்றும் ஒழுங்குமுறை அமைச்சின் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் 72 கடன் கடிதங்கள் மீளச் செலுத்தப்படவில்லை எனவும் சில கடன் கடிதங்கள் காலாவதியாகியுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தங்களிடம் இருந்த மருந்துகளின் இருப்பு தற்போது மிகவும் குறைந்த அளவில் இருந்ததையும் அரச மருந்துக் கூட்டுத்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது. அடுத்த சில மாதங்களில் கையிருப்பு தீர்ந்து போகும் அபாயத்தை தவிர்க்க முடியாது என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.