அனைத்து மாணவர்களும் இணையவழி இலவச கற்றல் திட்டத்தை துரித படுத்துமாறு நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார் .

0
114

 இ-தக்ஸலாவ திட்டத்தின் மூலம், நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களும் எந்தவொரு கட்டணமும் இன்றி இலவசமாக இணைய கற்றலில் ஈடுபடுத்தும் திட்டத்தை விரைவுபடுத்துமாறு தொடர்புடைய அதிகாரிகளிடம் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கேட்டுக் கொண்டார்.

தற்போதைய இ-தக்ஸலாவ அமைப்பில் உள்ள குறைபாடுகளை நீக்க வேண்டியதன் அவசியத்தையும் நாமல் வலியுறுத்யுள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட போதே இதனை தெரிவித்தார்.

ஜூலை 21 ஆம் திகதிக்குள் 200 மாணவர்களுக்கு இ-தக்ஸலாவ திட்டத்தின் மூலம் இலவசமாக இணைய வகுப்புகளை அணுக அனுமதிக்கும் முதல் கட்டத்தை வெளியிடுமாறு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

அரசு ஊடக நிலையங்கள் மூலம் கல்வி நோக்கங்களுக்காக ஒரு பிரத்தியேக தொலைக்காட்சி சேவையையும் வானொலி சேவையையும் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் நேற்று விவாதிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here