அன்னதானம் வழங்கியதால், சந்நிதியான் ஆசிரமத்துக்கு சீல்

0
22
OLYMPUS DIGITAL CAMERA

அதிக எண்ணிக்கையிலான பக்தர்களை அழைத்து அன்னதானம் வழங்கியதால், சந்நிதியான் ஆச்சிரமம், தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ், இன்று (06) பிற்பகல் மூடப்பட்டுள்ளது.

பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில், அப்பகுதிக்குப் பொறுப்பான பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் மேற்படி அறிவித்தல் ஒட்டப்பட்டு, ஆச்சிரமம் மூடப்பட்டது.

வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமானாறு செல்வச் சந்திநிதி கோவில் வருடாந்திர பெருந்திருவிழா, நாளை மறுதினம் (08) ஆரம்பமாகிறது. சுகாதாரக் கட்டுப்பாடுகளின் கீழ், மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் திருவிழாக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று நண்பகலுக்குப் பின்  சந்நிதியான்  ஆச்சிரமத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அதன்போது, கட்டுப்பாடுகளை மீறி அதிகளவானோரை ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு அழைத்து அன்னதானம் வழங்கியதால், பொதுச் சுகாதார பரிசோதகரால் ஆச்சிரமம் மூடப்பட்டது.

இதேவேளை, கோவில் சூழலில் அமைந்துள்ள கடைகளில் உள்ளோர், பி.சி.ஆர் பரிசோதனை எடுக்கும் வரை வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது என்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் அறிவுறுத்தப்பட்டது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here